Wednesday, August 17, 2005

jlkj

சின்னவளாய்
நானும் நீயும் கட்டிய வீடு
நாற்சாரமும் நல்லொரு
முற்றமும்சேர்ந்து நாங்கள்
கட்டிய வீட்டில்
சேராதிருந்தது ஏற்றத்தாழ்வு..
பட்டம் விட்டோம்
பாதியாய் உழைத்தோம்
திட்டம் போடுவோம்
தீர்வொன்றெடுப்போம்
தட்டான் பிடிப்போம்
சரியாய்ப் பிரிப்போம்
தோட்டம் போடுவோம்
அறுவடை தொடுவோம் ..

Sunday, August 14, 2005

திருத்த

எனக்கென்று
ஒரு நண்பன் இருந்தான்
புரட்சி பற்றி பிரசங்கம் பண்ணுவான்
சுதந்திரம் எமக்குத் தேவையே என்பான்
விடியல் ஒன்று வேண்டும் என்பான்
சமத்துவம் பற்றி தர்க்கமே புரிவான்
இனிய நண்பன் இல்லையா பாருங்கள்....?

திடீரென ஒரு நாள்
காணாமற் போனான்
மீண்டும் ஒரு நாள் வந்து சேர்ந்தான்.

காணமற்போன
சேதியைக் கேட்டேன்
குசினியைக் கூப்பிடும்
அலுவலாய் போனதாம்.....
கூப்பிடும் ஒழுங்கில் குழப்பங்கள் பலவாம்
கூறியபடியே கொடுபட வில்லையாம்
நடைமுறை
மரபு
யதார்த்தம் என்றான்
இவனையும் திருத்த ஆயத்தமானோம்.

கோசல்யா கவிதைகள் (1992)

உன்னிடத்தில் தோழி

சிறை வைக்கப்பட்டிருந்தால்தானே
உன்னை மீட்பதற்கு
உனது விடுதலை
சுதந்திரம்
ஒன்றும்
மற்றவர் கையில் இல்லையே !

உனக்கானவற்றைத் தர
யோசிப்பது நிற்பதும்
யாரிடம் யாசிப்பதும் நிற்பதும்
உன் வாழ்வியல் போராட்டங்களில்
அவர்கள் பங்கேற்றார்களா ?

விலங்கு ....
இதை இட்டது யார் ?
ஒரு வேளை ..
நீயாகவும் .இருக்கலாம் .

சமுதாயம் ..
பயம் ..
இவற்றை ..
கண்ணக்குள்ளே வைத்து
உன்னையே நீ..
எமாற்றிக் கொண்டிருக்கிறாய் .

மனதுக்குள் ...
உனக்கானவை எத்தனை ?
உன்னோடு வாழ்ந்தவருக்காக
அர்ப்பணித்து விட்டேன் என நினைத்து
போலியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாய் .

உனக்கானவற்றைத் தேடு
இஸ்டப்பட்டதை ...
ஏற்றுக்கொள் .
தடுக்கவோ பறிக்கவோ
இங்கே யாருக்கு உரிமை ?

விதவை...
அந்நியப்படுத்தி
இனங் காட்டும்
அடையாளங்களைத் தூக்கியெறி.

நீ ..
கல்லூரியிலும்
குசினியிலும்
குழந்தைப்பேறிலும்
போராடி முடித்தவள் .
இதுவொரு போராட்டமா ?

உன்னிடத்தில்;
விழிப்பு எப்போ ?
அதற்கான பாதையில்
ஆயிரம் தோழிகள் வரலாம்
இங்கே எல்லாமே
உன்னிடத்தில் தான் !

கோசல்யா கவிதைகள் ( 1992- )

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது